விமானத்தில் ரகளை: ஹொலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது!

ஹொலிவுட் திரையுலகில் ‘ஹெல்பாய்’, ‘லீகலி பிளாண்ட்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை செல்மா பிளேயர் (வயது 54). சமீபகாலமாக மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காகப் போராடி வெள்ளை மாளிகை வரை சென்று பாராட்டுப் பெற்றார்.

இந்நிலையில் லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க் நோக்கிப் பறந்த டெல்டா எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த செல்மா பிளேயர், நடுவானில் திடீரென ரகளையில் ஈடுபட்டார். தடுக்க வந்த 2 விமானப் பணிப்பெண்களைக் காயப்படுத்திய அவரை, பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அங்கிருந்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெண்பொலிஸ் அதிகாரியின் முகத்திலும் சரமாரியாக தாக்கினார். மேலும் சிகிச்சையின்போது அங்கிருந்த தாதியர்களையும் உதைத்து தள்ளினார்.

நரம்பியல் நோய்க்கான மருந்தை உட்கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலை காரணமாகவே அவர் இவ்வாறு கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாக அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *