மட்டக்களப்பு, அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் வெல்லாவெளி சந்தி, மகிழடித்தீவு சந்தி மற்றும் அம்பிளாந்துறை துறையடி ஆகிய மூன்று இடங்களில் ஆசிரியர்களை வரவேற்று, மலர் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்வு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

