வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் 1,450 மில்லியனில் அபிவிருத்தி: பிரதி அமைச்சர் கள விஜயம்!

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மீன்பிடி பிரதி அமைச்சர் ரத்ன கமகே  தலைமையிலான குழுவினர் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

முக்கிய முடிவுகள் & கலந்துரையாடல்கள்:

  • 1450 மில்லியன் நிதி ஒதுக்கீடு: வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ள 1,450 மில்லியன் ரூபாய் நிதி மற்றும் அந்நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதி அமைச்சரால் தெளிவுபடுத்தப்பட்டது.

  • படகுகள் நிறுத்தும் தளம் விரிவாக்கம்: துறைமுகத்தில் படகுகளை நிறுத்தும் தளத்தினை விரிவுபடுத்துவது மற்றும் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

  • நேரடிப் பார்வையாடல்: பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் படகு மூலம் துறைமுகப் பகுதிக்குச் சென்று, துறைமுகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான வசதிகளை நேரில் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் தலைவர் கபில பமுன ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீரன்ஜன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் ரெஜினோல் விஜிதரன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *