அனோஜனுடன் சஜித் தொலைபேசி உரையாடல்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.

சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என சஜித் பிரேமதாச பெற்றோரிடம் உறுதியளித்தார்.

இதன்போது, சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். சிவராசா அனோஜனுக்கு ஏற்பட்ட இந்தத் தவறுக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு நிவாரணம் வழங்கி, முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபியாவின் மன்னரிடம் கனிவாகவும், கௌரவமாகவும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *