ஒரு பந்து, விக்கெட் இருக்க வென்ற அவுஸ்திரேலியா

சிம்பாப்வேக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட், பந்து மீதமிருக்கையில் அவுஸ்திரேலியா வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்று

தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய அவுஸ்திரேலியா, ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற இப்போட்டியையும் வென்றமையையடுத்து 3-0 என சிம்பாப்வேயை வெள்ளையடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் ஆட்டமிழக்காத 81 (72), கிறேய்க் எர்வினின் 59, இனொசென்ட் கையாவின் 55, பிரயன் பென்னிட்டின் 30 ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் நாதன் எலிஸ் 3, ஸ்பென்சர் ஜோன்சன் 2, அடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 272 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே ட்ரெவிஸ் ஹெட், அணித்தலைவர் மிற்செல் மாஷை பிரட் எவான்ஸிடம் வீழ்ந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் கூப்பர் கொனோலியும் கிறேமி கிறீமரிடம் வீழ்ந்தார்.

 

அடுத்து வந்த ஸ்கேவியர் பார்ட்லெட்டும் கிறீமரிடம் வீழ்ந்தார். சிறிந்து நேரத்தில் இங்லிஸும் 103 ஓட்டங்களுடன் ராசாவிடம் வீழ்ந்தபோதும் அடம் ஸாம்பா உதவியுடனும் அவர் எவான்ஸிடம் வீழ்ந்த பின்னர் ஸ்பென்சரின் உதவியுடனும் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் எலிஸ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து 36 (44) ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக இங்லிஸும் தொடரின் நாயகனாக கொனோலியும் தெரிவாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *