மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகத்தை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி, நூலக திறப்பு விழாவில் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அவர் நூலக வளாகத்தில் மரக்கன்றும் நட்டுவைத்தார்.

