மோடியின் வெளிநாட்டு பயணத்தில் இத்தாலி பிரதமருடன் கலந்துரையாடல்

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்குப் பயணம் முடித்து இன்று இத்தாலி சென்றார்.ரோம் நகரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இத்தாலி துணை பிரதமர் அண்டோனியோ தஜானி நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *