15 வயதான சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் உலக கவனத்தை ஈர்த்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அவர், நேற்றைய போட்டியில் 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் குறைந்தது 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டை பதிவு செய்துள்ளார். 2026 தொடரில் அவர் அபாரமாக 236.3 என்ற ஸ்டிரைக் ரேட்டை எட்டியுள்ளார். இதற்கு முன், 2019-ல் 204.8 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆந்திரே ரசல் இந்த சாதனையை வைத்திருந்தார். மேலும், ஒரு ஐபிஎல் சீசனில் 50-க்கும் அதிக சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். தற்போது அவர் 2026 சீசனில் 53 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

