எல். பி. எல் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் மற்றும் முக்கிய விபரங்கள் இன்று (22) அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய லங்கா ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை போட்டிகள் நாட்டின் நான்கு முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இதன்படி (SSC) கொழும்பு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகல, தம்புள்ளை ஆகிய மைதானங்களில் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

குறித்த தொடரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களுக்கான இணையவழிப் பதிவு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *