மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் சரிவு!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் 7,270 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பானது மார்ச் மாத இறுதியில் 7019 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

இந்த மொத்தக் கையிருப்பானது, சீன மக்கள் வங்கியுடனான (People’s Bank of China) பரிமாற்ற உடன்படிக்கையின் மூலம் பெறப்பட்ட நிதியையும் உள்ளடக்கியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *