ஈரான் தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சியினரே காரணம்!

இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றால், பங்குச் சந்தை வீழ்ச்சியடையும் என்றும், ஈரானின் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என்றும் தாம் ஏற்கெனவே கணித்திருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பங்குச் சந்தை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், இருப்பினும் அவற்றால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானியத் தலைவர்கள் ஜனநாயகக் கட்சியினரை பலவீனமானவர்கள், திறமையற்றவர்கள் மற்றும் நாட்டை அழிப்பவர்கள் எனக் கருதுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், எண்ணெய் விலையை உயர்வாக வைத்திருப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் கடுமையாகப் போராடியதாகவும், தேர்தலுக்குப் பின்னர் எண்ணெய் விலைகள் சாதனை அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *