இரண்டு வகையான சர்வதேச மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியினர் அடுத்த மாதம் பங்களாதேஷ் பயணமாகவுள்ளனர். இங்கிலாந்தில் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவுள்ள 10ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணியினர் தயாராகும் வகையில் பங்களாதேஷுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரிலும் இலங்கை பங்குபற்றவுள்ளது.
பங்களாதேஷில் முதலாவதாக மகளிர் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் அதனைத் தொடர்ந்து மகளிர் சர்வதேச ரி20 தொடரும் நடைபெறும். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராஜ்ஷாஹி விளையாட்டரங்கில் ஏப்ரல் 20, 22, 25ஆம் திகதிகளில் நடைபெறும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான மகளிர் சர்வதேச ரி20 தொடர் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஏப்ரல் 28, 30, மே 2ஆம் திகதிகளில் நடைபெறும். இத் தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணியினர் ஏப்ரல் 17ஆம் பங்களாதேஷ் நோக்கி புறப்படுவர்

