எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை இன்று புதன்கிழமை நடைமுறையில் உள்ளது.

எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக, இனிமேல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சாரம், நீர் வழங்கல், போக்குவரத்து, துறைமுகங்கள், விமான சேவைகள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடுமுறை நாட்களில் தேவையான பணிகள் தடையின்றி நடைபெறவும், அத்தியாவசிய சேவைகள் சீராக தொடரவும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச துறைகளில் எரிசக்தி நுகர்வை குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட தற்காலிக நடவடிக்கை என குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *