இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய கொள்கை வட்டி வீதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் ஒரே இரவிற்கான கொள்கை வட்டி வீதம் (Overnight Policy Rate – OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவிலேயே தொடர்ந்து பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

