மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நாளாக இருக்கும். சுகமான அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உயர் பதவி நோக்கி பயணம் செய்வீர்கள். தகுதிக்கு ஏற்ற சம்பளத்தை பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும், புதிய முதலீடுகளை செய்யுவதற்கும் இது சிறந்த நேரம். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தைரியமாக நடத்தலாம்; உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.நீங்கள் மேற்கொள்ளும் பணிகளிலும் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆனால், ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. நேரம் தவறாமல், சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும். நண்பர்கள் வழியாக நல்ல அனுபவங்களும் ஆதரவுகளும் கிடைக்கும். கடன் சுமை குறைந்து, தேவைக்கேற்ப பண வசதி இருக்கும்.நீண்ட தூர பயணங்கள் சிறப்பாக நடைபெறும். நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த உறவுகளை சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் ஏற்படலாம்.ஆனால், வண்டி ஓட்டும் போது மட்டும் கவனமாக இருப்பது அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாள். நீங்கள் சுறுசுறுப்பாக இருந்து, உங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து, மன நிம்மதி அதிகரிக்கும். நாள் முழுவதும் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.ஆனால், நேரத்தை வீணடிக்காமல் கவனமாக பயன்படுத்துங்கள். தேவையில்லாமல் கைபேசியைப் பயன்படுத்தும் பழக்கத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த நாள். காதல் உணர்வுகள் வெளிப்படும்; அது நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு இது திருமணத்திற்கும் முன்னேறும் வாய்ப்பு உண்டு.நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த எண்ணங்களை திறந்த மனதுடன் பகிர்வீர்கள். அதனால் மனநிம்மதி அதிகரிக்கும். இரவில் நல்ல உறக்கமும் கிடைக்கும்.இறைவன் அருளால் நாள் இனிமையாக அமையும். வேலை மற்றும் வியாபார விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான மற்றும் நிறைவேற்றம் தரும் நாள். நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதாக முடியும். ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புகள் அதிகம்.வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் முயற்சிகள் நல்ல பலன் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும், சேமிப்பு உயரக் கூடிய நல்ல நாளாகவும் இது அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமையும் தன்னம்பிக்கையும் நிறைந்த நாள். சுறுசுறுப்பாக செயல்பட்டு பல காரியங்களை சாதிப்பீர்கள். உங்களின் கவர்ச்சியான தோற்றமும் இனிமையான பேச்சும் மற்றவர்களை ஈர்க்கும். உங்களைப் பார்த்தவர்கள் கூட “இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்” என்று நினைப்பார்கள். இந்த நல்ல நாளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமும் மரியாதையும் அதிகரிக்கும் சிறந்த நாள். உங்கள் பெயர், புகழ் மற்றும் அந்தஸ்து உயர வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். நீங்கள் சுறுசுறுப்பாக இருந்து உங்கள் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கும்; அவை உங்களுக்கு பல நன்மைகளையும் புதிய அனுபவங்களையும் அளிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலனும் நிம்மதியும் தரும் இனிய நாள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வேலை தொடர்பான சிக்கல்கள் படிப்படியாக குறையும்; எதிரிகளின் தொல்லையும் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளலாம், வங்கி கடன் தொடர்பான முயற்சிகளையும் தொடங்கலாம்.குடும்ப வாழ்க்கையில், குறிப்பாக கணவன்-மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் குறையும். பழைய பிரச்சனைகள் மெதுவாக தீர்வு காணும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும்.நீங்கள் திறந்த மனதுடன் பேசுவீர்கள்; சந்தேகங்களுக்கு சரியான பதில்களையும் அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதே நேரத்தில் சுப நிகழ்வுகளுக்கான செலவுகளும் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த சிறப்பான நாள். புதிய முயற்சிகளைத் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் இது நல்ல நேரம். வீட்டில் சுபகாரியங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம்; நல்ல முடிவுகள் கிடைக்கும்.வேலை மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். ஆனால் வாகனம் ஓட்டும் போது கவனம் அவசியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மறை எண்ணங்களால் நிரம்பிய நாள். உங்கள் பேச்சும் செயல்களும் மற்றவர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் மனதை எளிதில் புரிந்து கொண்டு, உங்களுடன் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் பெறுவார்கள்.உங்கள் பேச்சு, சிந்தனை மற்றும் செயல்பாடு அனைத்தும் உயர்ந்த நிலையை அடையும். இந்த நல்ல நாளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

