பாடசாலை மாணவிகளுக்கு 2026லும் விசேட வரப்பிரசாதம்

பள்ளி வாழ்க்கையில் பெண்கள் கல்வி பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்க, அரசு 2026ஆம் ஆண்டிலும் வயது வந்த பாடசாலை மாணவிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பள்ளிகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பள்ளிகளில் 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் சுமார் 1.05 மில்லியன் மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் நலன்கள் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *