ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கெங்கும் ஈரான் தாக்குதல்களை நடத்துகின்ற நிலையில், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
தமது வசதிகளின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களிலொன்றான கட்டார்எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியமையையடுத்து இயற்கை வாயுவின் விலைகள் நேற்று (02) உயர்ந்துள்ளன.
வாரயிறுதியில் ஹொர்முஸ் நீரிணைக்கருகில் குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், எண்ணெய் விலைகள் உயர்வடைந்து பரலொன்றுக்கு 82 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.

