திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘TVK’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ‘SI R.S’ என்ற அதிரடி கதாபாத்திரத்தில் அத்ரி அபிலாஷ் நடிக்கிறார். இன்று வெளியாகியுள்ள போஸ்டரில், பின்னணியில் போலீஸ் வாகனத்தின் சைரன் விளக்குகள் ஒளிர, தீவிரமான முகபாவனையுடன் அவர் தோன்றுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
“பாதுகாவலர்களே வேட்டையாடும் போது… புரட்சி தவிர்க்க முடியாதது” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ஒரு அழுத்தமான கதையம்சத்தை படம் பேசப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இயக்கம்: பிரவீன் கிருஷ்ணராஜா
ஒளிப்பதிவு: கதிர் ராஜசேகரம்
படத்தொகுப்பு: துசிகரன்
இசை: சகிஷ்ணா சேவியர்
சிலோன் மெட்டல் இண்டஸ்ட்ரி பெருமையுடன் வழங்கும் இத்திரைப்படம், ஒரு தீவிரமான போராட்டக்களத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
TVK 2026-ல் திரைக்கு வரத் தயாராகி வரும் நிலையில், இந்தப் புதிய போஸ்டர் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


