கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை 206டி கிராம சேவகர் பிரிவுக்கான பிரஜா சக்தி குழுக்கான அபிவிருத்தி சம்பந்தமான முதலாவது ஒன்று கூடல் தவிசாளர் முபாஸ் தலைமையில் நேற்று(13) மாலை வாழைச்சேனை ஹைராத் பாடசாலையில் இடம்பெற்றது.
குறித்த பிரிவுக்கான ஒன்று கூடலை ஒழுங்கமைத்து நடாத்திய பொருளாதார கிராமிய வலுவூட்டல் உத்தியோகத்தர் செயலாளர் முஜிபா ஹைராத் பாடசாலையின்தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் , ஏனைய அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாகவும், பிரஜா சக்தியினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் தெளிவுபடுத்தினார். அத்தோடுத விசாளர் முபாஸினால் ஒரு தொகை மின்விளக்குகள் பாடசாலையின் தேவைக்காக அதிபர் றமீசிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் 206டிக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பாரூக், ஓட்டமாவடி பி/2க்கான பிரஜா சக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட்டும் சமூகமளித்திருந்தனர்.

