மிக நீண்ட காலமான கற்பித்தல் சேவையிலும் மற்றும் ஏனைய இதர அரச சேவைகளும் பணியாற்றி இன்றுடன் ஓய்வு பெறுகிறார் அல்ஹாஜ். யு .எல் .எம். என். முபீன் ஆசிரியர் .
இவருக்கான பிரியாவிடை வைபவம் இன்று[09] காத்தான்குடி மீரபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் விசேட காலை கூட்டத்துடன் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் யு எல் மன்சூர் (SLPS -I) இன் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் உயர்தர பிரிவில் கற்பித்தல் கடமைக்கு அப்பால் உதவி அதிபராக ஒழுக்க குழுவின் தலைவராக மாணவத் தலைவிகளுக்கு பொறுப்பாளராக இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபராக மற்றும் பல்வேறு பணிகளில் முபீன் ஆசிரியர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை கடமைக்கு அப்பால் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றிக் குழுவின் ஒரு உறுப்பினராக பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபராகவும் அதன் ஆலோசகராகவும் செயற்பட்டு பாடசாலைக்கு பல்வேறு செயத்திட்டங்கள் நடைபெற முபீன் காரணகர்த்தாவாக இருந்தார்.
வறிய மாணவர்களுக்கு உதவும் மாணவர் நலன்புரிச் சங்கம் ஆசிரியர்களுக்கு இடையில் வட்டி இல்லா வங்கி கடன் வழங்கும் நுஸ்ரத் வங்கி முறைமை உள்ளிட்ட பல வேலை திட்டங்கள் முபீன் ஆசிரியரின் சிந்தனையில் உருவாகி இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாணவருக்கு உதவும் மாணவர் நலன்புரிச் சங்கம் பின்னர் பாபுல் ஹையர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக செயற்பட்டு கல்வி அமைச்சின் தேசிய விருதை பெற்றுக் கொண்டது சிறப்பம்சமாகும்.
பாடசாலைக்கு பல்வேறு பௌதீக வளங்கள் கிடைப்பதற்கும் முபின் ஆசிரியரின் பணி பெரிதும் உதவியாக அமைந்தது தற்போது சிறப்பாக இயங்கும் விஞ்ஞான பிரிவுக்கான இரண்டு மாடி கட்டிடம் அத்தோடு பள்ளிவாயல் செயற்பாட்டறை உள்ளிட்டவைகள் முபீன் ஆசிரியர் முயற்சியினால் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றவையாகும்.
இவருடைய பிரதான அரசறிவியல் பாடப் போதனையில் மாணவர்கள் தொடந்தேச்சியாக உயர்தரப்பரீட்சையில்
ஏ ‘A ‘தரத்தில் அதி திறமை சித்தி பெற்றது ஆசிரியரின் சிறப்பான கற்பித்தலை பறைசாற்றுகிறது.
இணைப்பாளவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் என்ற வகையில் பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் பல்வேறு விருதுகளைப் பெற்று பாடசாலையின் புகழ் இலங்கை முழுவதும் பரவுவதற்கும் பாடசாலையைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

இடைக்காலத்தில் பாடசாலை கற்பித்தல் சேவையிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுவிப்பு பெற்று
காத்தான்குடி நகர சபை தலைவராக,
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக,
முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக,
இலங்கையின் சமாதான பேச்சு வார்த்தையில் களப்பணியாற்றுவதற்கு உருவாக்கப்பட்ட சகவாழ்வு மன்றத்தின் ஆலோசகராக பதவி வகித்ததோடு, இதற்கு அப்பால் நகர திட்டமிடல் நீர் வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு,
உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றின் இணைப்புச் செயலாளராகவும் கடமை ஆற்றி பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியதோடு நூற்றுக்கு மேற்பட்டோருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் முபீன் ஆசிரியர் காரணமாக இருந்தார்.
ஆசிரியரின் ஓய்வு காலம் சிறப்புற பாடசாலை நிர்வாகம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இன்று இடம்பெற்ற இப் பிரியாவிடை நிகழ்வில் பாடசாலை முகாமைத்துவக் குழு பழைய மாணவர் சங்கம் மற்றும் SDEC, இவர் கற்பித்த வகுப்பு மாணவிகள் என பலரும் அன்பளிப்புக்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

