திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாபெரும் பொங்கல் விழா இன்று (08) மூதூர் இந்து இளைஞர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.


அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் பிரதான வீதியூடாகச் சென்ற கலாசார ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது.
சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மி மற்றும் வரவேற்பு நடனங்களுடன் தமிழர் பாரம்பரியம் பறைசாற்றப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் W.G.M. ஹேமந்தகுமார அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

