வெங்காயம் மற்றும் பூண்டின் மகிமை!

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் இருந்து தேநீர் தயாரிக்கப்படும் இன்றைய காலத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்..

இந்த வெங்காய தோல் தேநீரில் வைட்டமின் A, C, E நிரம்பவே உள்ளன. இதனால் தோல்வளம் சிறப்புறுவதோடு முடி வளர்ச்சி மற்றும் கண் பார்வையும் சிறப்புறும். அத்தோடு உடலின் எதிர்ப்புச்சக்தியையும் மேம்படுத்துகிறது.

இதில் உள்ள antioxidant கனிமங்கள் கொழுப்பை குறைக்கும் அதே நேரம் இதயத்தை சிறப்பாக காக்கிறது.

இரவில் சீரான தூக்கத்தை பெற இந்த தேநீர் உதவுகிறது.

இந்த தேநீரை அடிக்கடி தலையில் தடவி ஊற வைத்து வெறும் நீரில் அலசி வரும் போது முடி கொட்டும் பிரச்சினை மட்டுமல்ல பொடுகு தொல்லையும் நீங்குகிறது.

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் தேநீர் தயாரிக்கும் முறை…

வெங்காயம் மற்றும் பூண்டை வெட்டும் முதல் அப்படியே நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதன் பொழுது தோலில் உள்ள அழுக்கு மற்றும் ரசாயனங்கள் வெளியேறும்.

பின் தோல் உரித்து நிழலில் உலர்த்தி சேமித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது அன்றன்று சேமிப்பதை ஒரு கப் நீரில் சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

ஆரோக்கியம் தரும் நல்ல விடயங்களை என்றும் அலட்சியப்படுத்தாதீர்கள். இனிமேல் யாரும் தூக்கி வீசமாட்டார்கள் வெங்காயம் மற்றும் பூண்டின் தோலினை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *