நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தை முன்னிட்டு, நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத்தும் பங்கேற்றுள்ளார்.

 

இந்நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *