மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது அதிகபட்ச வெப்பநிலை 31°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°C ஆகவும் காணப்படலாம்.

மேலும், மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *