வாழ்க்கைச் செலவுப்படி உயர்வு கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்குமான வாழ்க்கைச் செலவுப்படியை 25,000 ரூபாவால் அதிகரித்து வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்த உத்தியோகத்தர்கள் மற்றும் பல சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (23) முன்னெடுத்தனர்.
அரச உத்தியோகத்தர்களின் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களுக்கான அரச சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், அமைதியான முறையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *