சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகினாகல பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று திங்கட்கிழமை (23) அந்தக் காணிக்குள் நுழைய முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காணியின் குறுக்கே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, குறித்த மின்சாரக் கம்பியைச் சட்டவிரோதமாகப் பொருத்திய குற்றச்சாட்டில் லகினாகல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *