மட்டக்களப்பு, கன்னங்குடா – பருத்திச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பொன்னம்பலம் லிதுர்ஷன் துபாயில் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு வெளிநாடு சென்ற இளைஞரின் திடீர் மறைவு, பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இளைஞர்கள் மனக்கவலைகளைத் தனியாகச் சுமக்காமல் நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்து, தேவையான உதவிகளை நாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

