பீட்ரூ தோட்டத்தில் 09 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகத் தமது லயன் வீடுகளை இழந்த 09 குடும்பங்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில், அவ்வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (22) நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பீட்ரூ (Pedro) தோட்டத்தில் நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் தமது வீடுகளை இழந்த இக்குடும்பங்களுக்கு, அதிலிருந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நிரந்தர வீடொன்றின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. அதற்குப் பதிலாக, தற்காலிகமாகத் தகரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகளில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *