வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு தினம்!

2027 பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ள பல யோசனைகளுக்கு எதிராகப் பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (23) தேசிய போராட்ட நாளாக பிரகடனப்படுத்தியுள்ளன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்இ சுகாதாரப் பணியாளர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்இ வைத்தியர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முதன்மையாக முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுராத சேனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளைஇ அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதிபர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து பாடசாலைகளுக்குச் சமுகமளிப்பார்கள் என அதிபர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதயேனி திஸாநாயக்க தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தை அங்கீகரிக்கத் தவறியமையே இவ்வாறான பிரச்சினைகளுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வைத்தியர்கள் அல்லது சுகாதாரத் துறை எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் லசித கன்னங்கர தெரிவித்தார்.

அரச தாதியர் சங்கம் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க சங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் உருவாக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் (UTUJC) இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *