நப்லஸ் நகரில் இஸ்ரேல் தாக்குதல்!

மேற்குக் கரையின் நப்லஸ் நகரின் பல பகுதிகளிலும், கிழக்கே உள்ள நகரத்திலும் இஸ்ரேலியப் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகரின் கிழக்கே அமைந்துள்ள பெய்ட் ஃபூரிக் மற்றும் பெய்ட் டஜான் நகரங்களில், இஸ்ரேலியப் படைகள் பல சுற்றுப்புறங்களில் அதிரடித் தாக்குதல் நடத்தியதோடு, வீடுகளில் சோதனையும் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நப்லஸின் வடக்கு மலைப் பகுதி, மக்கள் குடியிருப்பு, ஆஸ்திரிய குடியிருப்பு மற்றும் பழைய அஸ்கர் முகாம் பகுதிகளில் வீரர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தி, வீடுகளுக்குள் நுழைந்து, அவற்றின் உள்ளடக்கங்களைச் சேதப்படுத்தியதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *