தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் திட்டத்தின் கீழ் 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு நிறைவு பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2026.11.10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 23 பயனாளிகளுக்கு தலா ரூபா.10 இலட்சம் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், குறித்த கிராம அலுவலர் பிரிவுகளின் கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்களுடன் வீட்டுத்திட்டப் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

