கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று மருதமுனை – நீலாவனை பகுதியில் நேற்று புதன்கிழமை (11) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து காரணமாக பஸ்ஸில் பயணித்த பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

