ஏ-9 வீதியில் அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2 பஸ்களும் தனியார் பஸ் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

