கல்முனை தைக்கா வீதியில் மின்கசிவால் வீடு தீப்பற்றி எரிந்தது!

கல்முனை, தைக்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாகத் தீப்பற்றல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வருகை தந்துள்ளன. இருப்பினும், ஒரு வாகனத்தில் உள்ள நீரைப் பயன்படுத்தித் தீயை அணைத்த பின்னர், மற்றைய வாகனத்திலிருந்து நீர் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தீயணைப்பு வாகனத்தில் மீண்டும் நீர் நிரப்பப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், வீடு தீக்கிரையானதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படும் இவ்வாறான அவசரச் சந்தர்ப்பங்களில் உடனடியாகச் செயற்பட வேண்டிய தீயணைப்புப் பிரிவின் தயார் நிலை குறித்துக் கல்முனை மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *