நாடு முழுவதும் தேடுதல்: 410 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் மூலம் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் நாடு முழுவதும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸ் பிரிவு மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய (04)அறிக்கையின்படி 26இ868 நபர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 410 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *