இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு – எச்சரிக்கை!

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீத வளர்ச்சி காணப்படுவதாக தேசிய சுவாச நோய்கள் நிறுவனத்தின் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்த கருத்து

கLந்த காலத்தில் இலங்கையின் தரவுகளை நாங்கள் பரிசீலித்தோம். வெலிசறை மார்பு வைத்தியசாலை தரவுகளை ஆய்வு செய்தபோது இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

2010 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் வெலிசறை மார்பு வைத்திசாலையிலுள்ள நுரையீரல் புற்றுநோய் தொடர்பான தரவுகளையும் தேசிய புற்றுநோய் தடுப்பு இயக்கத்தின் தரவுகளையும் பரிசீலித்தோம்.

அதில் இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருசாராரிடையேயும் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது என்பது தெரியவந்தது. 2010 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பெண்களிடையேயும் ஆண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் சுமார் 50மூ வளர்ச்சியைக் காட்டுகிறது.

இதன் காரணமாகவே இது ஆண்களின் முக்கிய புற்றுநோய்களில் ஒன்றாகவும் பெண்களின் முதல் 10 புற்றுநோய்களுக்குள்ளும் வந்து கொண்டிருக்கிறது. இலங்கையிலும் புகையிலை பிடிக்காத நபர்கள்இ குறிப்பாக புகையிலை பிடிக்காத பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *