எரிபொருள் விலை உயர்ந்தாலும்! பஸ் கட்டணம் உயராது!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை சூத்திரத்தின்படி 4% சதவீதத்தை எட்டவில்லை என்பதால் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய நிலையில் பஸ் தொழில்துறை நஷ்டத்திலேயே முன்னெடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிவித்த அவர் குறுகிய தூர சேவைகளில் தினசரி 1,000 ரூபாயும் நீண்ட தூர சேவைகளில் 2,000 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *