வலி.வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி ஆரம்பம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு இணைந்து முன்னெடுத்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று (01) காலை இளவாலை பகுதியில் நடைபெற்றது.

இளவாலை கிராமிய வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான இந்தச் செயற்றிட்டம், இளவாலை மெய்கண்டான் மாகா வித்தியாலயம் வரை வீதியில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன முற்றாக அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் “விதையனைத்தும் விருட்சமே” அமைப்பின் உறுப்பினர்கள், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், இளவாலை நியூ மற்ஸ் அகாடமி, கிராம மக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *