323 கொள்கலன்கள் தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு!

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தற்போது இறுதி கட்ட தயாரிப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை காணாமல் போய்விட்டதாக, கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவின.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதித்துறை அமைச்சர், இத்தகைய கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்தார்.

பாராளுமன்ற சபாநாயகரால் நியமிக்கப்பட்ட இந்த குழு, 16 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும், அவை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *