பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் பயணம் !

2026 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் சென். ஜோன்ஸ் (St. John’s) நகரத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

இன்று (31) முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தின் போது, பிரதமர் பொதுநலவாய அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்குப் பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *