அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலபிட்டியவில் ஹீனட்டிய பிரதேசத்தில் 102 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டு அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரென கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடைபொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *