போலித் தகவல்களைப் பதிவிட்டு நிதி மோசடி: ஊழியர் கைது!

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய ஊழியரொருவர், நிறுவனத்தின் கணினித் தரவு அமைப்பினுள் போலித் தகவல்களை உள்ளீடு செய்து 59.65 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் மோசடி செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நம்பிக்கைத் துரோகம், நிதி மோசடி மற்றும் குற்றவியல் ரீதியான நிதி கையாடல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 4 ஆம் இலக்க நிதி விசாரணைப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் வெள்ளிக்கிழமை (30) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.

இச்சம்பவம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *