இன்றைய வானிலை!

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *