சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து லெக் ஸ்பின்னர் பென் வைட் ஓய்வு!

அயர்லாந்து அணியின் லெக் ஸ்பின்னர் பென் வைட் (Ben White), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது 28 வயதில் தனது ஓய்வை அறிவித்துள்ள பென் வைட், 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ரி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமானார்.

தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் 38 ரி20 சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த 2025 டிசம்பரில் பங்காளதேஷ் அணிக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாகும்.

தனது கிரிக்கெட் பயணத்தில் நாட்டுக்காக விளையாட வாய்ப்பளித்த அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள பென் வைட், இனி வெளியில் இருந்து அயர்லாந்து அணியை ஆதரிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை இவர், சர்வதேச போட்டிகளில் மொத்தம் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 2021, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரி20 உலகக் கோப்பைகளில் அயர்லாந்து அணியின் வீரராக இடம்பெற்றுள்ளார்.

குறிப்பாக, ரி20 போட்டிகளில் தனது லெக் ஸ்பின் பந்துவீச்சு மற்றும் பந்தின் வேகத்தை மாற்றி வீசும் திறன் மூலம் கவனம் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *