மயிலத்தமடுவில் பசுவைச் சுட்டு உரித்த மூவர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடுவில் பசுவொன்று துப்பாக்கியால் சுட்டு உரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலுப்பையடி வெட்டையில் இன்று (2026.10.27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காசிநாதன் யோகன் என்பவரது 7 வயது நிரம்பிய மையிலைப்பசுவே இவ்வாறு சுட்டு உரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 8.00 மணிக்கு மயிலத்தமடுவில் உள்ள இலுப்பையடி வெட்டையில் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து வெடிச்சத்தம் கேட்ட பக்கத்திற்கு சென்று பார்த்த போது சிங்களவர்கள் மூவர் பசுவொன்றை துப்பாக்கியால் சுட்டு உரித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மூவரும் துப்பாக்கி, கத்தி என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒடியுள்ளதாக அப்பகுதிக்குச் சென்று பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *