நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு: நாளை ஆதரங்கள் சமர்ப்பிப்பு!

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தனது சாட்சியம் மற்றும் ஆதாரங்களை நாளை (28) சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நாமலுக்கு பிணை வழங்கக் கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த பிணை மனு தொடர்பான சாட்சியம் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், ஆணைக்குழுவின் ஆதாரங்களை நாளை (28) சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *