வழக்கமான ஒரு துறைமுக விஜயத்திற்காக, இன்று (26) கொழும்புத் துறைமுகத்திற்கு மீண்டும் வருகை தந்த சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெராவிற்கு (LCS 30) வழங்கப்பட்ட மிக அன்பான வரவேற்பினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பாராட்டுகிறது.
ஜூன் மாதத்தில் மேற்கொண்ட துறைமுக விஜயத்தினைத் தொடர்ந்து, இவ்வருடத்தில் இக்கப்பல் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயத்தினை இது குறிப்பதுடன், அமெரிக்க மற்றும் இலங்கைக் கடற்படைகளுக்கிடையிலான நீண்டகால பங்காண்மையினையும், இந்தோ – பசிபிக் பிராந்தியம் முழுவதும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இருகடற்படைகளுக்குமிருக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இவ்விஜயங்களை சீராகவும், வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு உதவியாக அமையும் இலங்கைக் கடற்படையின் தொழில்வாண்மைத்துவத்தினையும், ஆதரவினையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஒவ்வொரு விஜயமும், நம்பிக்கை, மற்றும் இந்து சமுத்திரம் முழுவதும் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையினையும் பேணுவதற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாடு
ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள எமது கடற்படை பங்காண்மையின் வலிமையினை மீளவலியுறுத்துகிறது.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.

