பாகிஸ்தான் – ஈரான் எல்லை வர்த்தகக் சுங்கச்சாவடி நேற்று மீண்டும் திறந்துவிடப்பட்டது.
முன்னதாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையிலுள்ள காப்த்-ரிம்தான் சோதனைச் சாவடி கடந்த ஒருவாரத்துக்கு முன்னதாக திடீரென முடக்கப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரமாக குறித்த வர்த்தகக் சுங்கச்சாவடி மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லொறிகள் அணிவகுத்து நின்றதுடன் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

