இந்தியா-சிம்பாப்வே பெண்கள் அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று (25) நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, துடுப்பாட்டம் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்கள் எடுத்தது.
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா சதங்கள் அடித்து இந்திய அணிக்கு உதவின.
இதையடுத்து 329 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் சிம்பாப்வே அணி 48.5 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மோடஸ்டர் முப்பச்சிக்வா 49(70) ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 2வது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள சிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

