இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்குத் திருமதி சந்திரிக்கா குமுததாஸ் தெரிவு!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கோளாவிலைச் சேர்ந்த திருமதி. சந்திரிக்கா குமுததாஸ் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கீதபாட ஆசிரியராக 2017ஆம் ஆண்டு முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்று அலிக்கம்பை திகோ/ புனித சவேரியன் வித்தியாலயத்தில் கடமையாற்றியதுடன் , தற்போது கோளாவில் திகோ/விநாயகர் மகாவித்தியாலயத்தில் சங்கீதபாட ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் கர்நாடக சங்கீதத் துறையில் பட்டம் பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் முதலாம் வகுப்பில் சித்தியடைந்து சிறப்புத் தகைமையையும் பெற்றுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை திகோ/கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில் கற்ற இவர், உயர்தரக் கல்வியை அக்கரைப்பற்று திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் கற்றதுடன் சிறந்த பெறுபேற்றினைப்பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.மேலும் நுண்கலைப்பீடத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கல்வி மற்றும் இசைத்துறையில் சிறப்பான அடைவுகளைப் பெற்றுள்ள திருமதி. சந்திரிக்கா குமுததாஸ் ஆசிரியர் கல்வியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *